×

ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 44 பேர் கைது: என்ஐஏ தகவல்

டெல்லி: ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 44 பேர் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா – வங்கதேச எல்லை வழியாக ஆட்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆட்களை கடத்தி வடமாநிலத்தவர் போல் வேலை பார்ப்பதாக புகார் எழுந்தது. திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, அரியானா, ராஜஸ்தானில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. சென்னை, பெங்களூரு, ஜெய்பூர், குவாகாத்தி ஆகிய 4 இடங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் மின்னணு சாதனங்கள், செல்போன்கள். சிம் கார்டுகள், ரூ.20-லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 44 பேர் கைது: என்ஐஏ தகவல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Delhi ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...