×

கட்டாய வெற்றி நெருக்கடியில் இலங்கையுடன் நியூசிலாந்து பெங்களூருவில் நாளை மோதல்

பெங்களூரு: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் 41வது லீக் போட்டியில் நியூசிலாந்து-இலங்கை தங்கள் கடைசி ஆட்டத்தில் மோதுகின்றன. நியூசிலாந்து முதல் 4 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் கடைசி 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் கடைசி போட்டியில் 400 ரன் குவித்தும் மழை குறுக்கீடால் பாகிஸ்தானுடன் பரிதாபமாக தோற்றது.

நாளை வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் செல்வது உறுதியாகாது. தென்ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்கவேண்டும். ஆனால் நாளை தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு செல்லவேண்டுமெனில், ஆப்கானிதான், பாகிஸ்தான் அணி தோல்வி அடைய வேண்டும். இதனால் நாளை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து உள்ளது.

மறுபுறம் இலங்கை 8 போட்டியில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் நாளை ஆறுதல் வெற்றிக்காக போராடும். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் இதில் வென்றால் தான் 2025 சாம்பியன் டிராபிக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.

நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 51ல் நியூசிலாந்து, 41ல் இலங்கை வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 8 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 7 போட்டியிலும் நியூசிலாந்து தான் வென்றுள்ளது. உலககோப்பையில் 11 முறை மோதியதில் 6ல் இலங்கையும், 5ல் நியூசிலாந்து வென்றுள்ளன.

மஞ்சள் அலர்ட்: பெங்களூருவில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏற்கனவே வெற்றி நெருக்கடியில் உள்ள நியூசிலாந்திற்கு மழை மிரட்டல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போட்டி நடைபெறும் மாலை நேரத்தில் 80 சதவீதம் இடியுடன் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டி கண்டிப்பாக பாதிக்கப்படும். ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இவ்வாறு நடந்தால் நியூசிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும். ஆப்கன், மற்றும் பாகிஸ்தான் தங்கள் கடைசி போட்டியில் வென்றால், அந்த அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதி வாய்ப்பை பெறும். நியூசிலாந்து நடையை கட்டவேண்டி இருக்கும்.

The post கட்டாய வெற்றி நெருக்கடியில் இலங்கையுடன் நியூசிலாந்து பெங்களூருவில் நாளை மோதல் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Bangalore ,Sri Lanka ,World Cup ,Chinnasamy Stadium ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!