×

சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரம் கட்டுமானப் பணி தொடர்பாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்..!!

கடலூர்: சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரம் கட்டுமானப் பணி தொடர்பாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இந்த கோயில் தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஏற்கனவே நீதிமன்றங்களில் இந்து குறித்து வழக்கு உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜன் கோயிலின் உள்ளே அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு நடத்தி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரம் கட்டுமானப் பணி தொடர்பாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது.

சிதம்பரம் கோயிலில் அனுமதியின்றி பணி?: விவரம் கேட்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தால், அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை அளிக்க வேண்டும். முறையான அனுமதி பெற்ற பின்னரே கோயிலில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தொல்லியல்துறை, நகராட்சி, அறநிலையத்துறையிடம் பெற்ற அனுமதியின் விவரத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் அருகே இடம் சுத்தப்படுத்தப்பட்டும், மதிற்சுவரில் மறைப்புகள் கட்டப்பட்டதும் தெரிய வருகிறது. சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரத்தையும் அளிக்க அறநிலையத்துறை அறிவுத்தியுள்ளது.

அனுமதி பெறவில்லை என்றால் சட்ட நடவடிக்கை
சிதம்பரம் கோயிலில் புதிய கட்டுமானங்கள் குறித்து விசாரணை நடத்த ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. அனுமதியின்றி கட்டுமானம் நடைபெற்று இருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரம் கட்டுமானப் பணி தொடர்பாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Foundation Department ,South Tower of Chidambaram Temple ,Cuddalore ,Chidambaram Temple ,Chidambaram Natarajar Temple ,Dinakaran ,
× RELATED கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற...