×

கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

*தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம்

புதுக்கோட்டை : தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை மாணவர்கள் உற்சாகத்தோடு கொண்டாடும் அதே சூழலில் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் அதேபோல் வடகிழக்கு பருவ மலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தீயணைப்புத் துறையினர் சார்பில் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக விபத்தில்லாமல் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்தம் வடகிழக்கு பருவமழையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னர் பட்டாசுகளை பாதுகாப்பாக எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதை தீயணைப்புத்துறையினர் மாணவர்கள் மூலம் வெடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் வெடிகளை எவ்வாறு பற்ற வைக்க வேண்டும் மத்தாப்பை எவ்வாறு கொளுத்த வேண்டும் என்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் செய்து காட்டினர்.மேலும் தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படாமல் எவ்வாறு மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பயன்படுத்தி வெடித்து முடித்த மத்தாப்பு கம்பிகளை தண்ணீரில் நனைத்து வீச வேண்டியதன் அவசியம் எந்த வெடி வெடித்த பின்பும் கைகளை கழுவ வேண்டும். அதேபோல் பட்டாசுகள் வெடித்து முடித்த பின்பு குவியும் குப்பைகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அகற்றுவது குறித்தும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு செயல்விளக்கமாக எடுத்து கூறினர்.

அதேபோல் வடகிழக்கு பருவமழையில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பேரிடர் காலங்களில் இருக்கும் பொருட்களை வைத்து நம்மை நாம் எவ்வாறு தற்காத்துக் கொள்வது பிறரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் விளக்கமாக எடுத்து கூறினர். மேலும் இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kiranur Government Girls High School ,Pudukottai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...