பாட்னா: பெண்கள் கருவுறுதல் விவகாரம் தொடர்பாக தான் பேசிய கருத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பீகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், கணவன் – மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்கள் குறித்தும், சைகை மொழியிலும் பேசினார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூடுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது பேச்சுக்கு மன்னிப்பு கோருகிறேன், எனது வார்த்தைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை நான் கூறவில்லை. யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கருவுறுதல் விகிதம் குறைவதைப் பற்றி விளக்கவே நான் முயற்சித்தேன். நான் எப்போதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறேன். நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’ என்றார். ெதாடர்ந்து நடந்த சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வரின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
The post பெண்கள் கருவுறுதல் தொடர்பாக நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: பீகார் முதல்வர் திடீர் பல்டி appeared first on Dinakaran.