×

பெல்ஜியத்தில் குதிரைகளின் முதுகில் அமர்ந்து மீன்பிடிக்கும் விழா: இறால் மீன் பிடித்தலை தக்கவைத்துள்ள கடைசி கிராமம்

பிரஸ்ஸல்ஸ்: கடற்கரையில் குதிரை சவாரிகளை தான் நாம் கண்டிருப்போம். ஆனால் பெல்ஜியத்தில் குதிரைகளின் முதுகில் அமர்ந்து கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் நடைமுறை பாரம்பரிய விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெல்ஜியம் நாட்டில் கடலோர கிராமங்களில் ஒன்றுதான். எப்போது குதிரைகளில் ஏறி கடலுக்குள் சென்று இறால் மீன்களை பிடித்து வரும் பாரம்பரிய முறையை தக்க வைத்துள்ள கடைசி கிராமம் இது.

இந்த விழாவை நூற்றாண்டு பழமையான பாரம்பரியமாக யுனெஸ்கோவும் அங்கீகரித்துள்ளது. அட்லாண்டிக் கடலில் இந்த கிராமத்தின் மக்கள் குதிரைகளின் மீது அமர்ந்தும், குதிரை வண்டிகளிலும் குறிப்பிட்ட தூரம் வரை செல்கின்றனர். அப்படி செல்லும் போது இரும்பு சங்கிலிகளை கடலின் அடி மணலில் இழுத்து செல்கின்றனர். அப்போது ஏற்படும் உராய்வில் துள்ளி குதிக்கும் இறால் மீன்கள் குதிரைகளின் இருபுறமும் கட்டி வைக்கப்பட்டுள்ள கூடை வலைகளில் விழுகின்றன.

The post பெல்ஜியத்தில் குதிரைகளின் முதுகில் அமர்ந்து மீன்பிடிக்கும் விழா: இறால் மீன் பிடித்தலை தக்கவைத்துள்ள கடைசி கிராமம் appeared first on Dinakaran.

Tags : sitting on the backs of ,Belgium ,Brussels ,Horse Riding Fishing Festival ,
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...