×

ஊழல் குற்றசாட்டு எதிரொலி: போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா ராஜினாமா

போர்ச்சுகல்: ஊழல் குற்றசாட்டு எதிரொலியாக போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மீது லிதியஸ் சுரங்கங்கள் மற்றும் ஐட்ரஜன் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றசாட்டு எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் பிரதமரின் தலைமை அதிகாரிகள் அலுவலகம், 2 அமைச்சகங்கள் உள்ளிட்ட 25 அரசு அலுவலக வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ஊழல் தடுப்பு துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் பிரதமர் அன்டோனியோ உடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் போர்க்கோடி தூக்கினர். பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த அழுத்தங்களை அடுத்து பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அதிபர் மாஸிஸலோ ரெபேலோ டிசோசா அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

The post ஊழல் குற்றசாட்டு எதிரொலி: போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Portugal ,Antonio Costa ,Antonio ,Portugal… ,Prime Minister Antonio Costa ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் போர் நாளுக்கு நாள் ஆபத்து : ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை