×

அதிகரிக்கும் காய்ச்சல் பழநி ஜிஹெச்சிற்கு நோயாளிகள் எண்ணிக்கை வருகை அதிகரிப்பு

பழநி, நவ. 8: அதிகரிக்கும் காய்ச்சலின் காரணமாக பழநி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழநி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று வீசி வருகிறது. இத்திடீர் பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஏராளமானருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வழக்கத்தை விட பழநி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: பருவநிலை மாறுபாட்டின் காரணமாக பழநி அரசு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நாளொன்றிற்கு சராசரியாக 1000க்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இவர்களில் காய்ச்சலுக்காக வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் இருப்பு உள்ளன. காய்ச்சலுக்கு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலை தடுக்க சுடு தண்ணீரை பருக வேண்டும். ஆறிய மற்றும் பழைய உணவு வகைகளை உட்கொள்ள கூடாது. சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post அதிகரிக்கும் காய்ச்சல் பழநி ஜிஹெச்சிற்கு நோயாளிகள் எண்ணிக்கை வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani GH ,Palani ,Palani Government Hospital ,Palani… ,GH ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை