×

மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி தேர்விற்கு ஆயத்த பயிற்சி

சிவகங்கை, நவ.8: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ.18ம் தேதிக்குள் வழங்க வேண்டும். கூடுதல் தகவல் பெற மேற்கண்ட அலுவலகம் அல்லது 04575-240848, 94453 41881 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி தேர்விற்கு ஆயத்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Department of Fisheries and Fishermen Welfare ,Chennai All India ,
× RELATED அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம்