×

சிவகாசி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் ஊழியர் உள்பட 5 பேர் மீது வழக்கு

 

சிவகாசி, நவ. 8: சிவகாசியில் சரக்கு வாகத்தில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பெண் ஊழியர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர். சிவகாசி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. விருதுநகர் சரக டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் அனுராதா, எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிவகாசி பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்த போது 3 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் கடை விற்பனையாளர் அன்னலட்சுமி, உடந்தையாக இருந்த அவரது கணவர் தங்கமாரியப்பன், மாரிக்காளை, வெற்றி, சீனிப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மாரிக்காளையை கைது செய்தனர். மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

The post சிவகாசி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் ஊழியர் உள்பட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா