×

அரசு பள்ளிகளுக்கு கொடை நூல்களை கலெக்டர் வழங்கினார்

 

கரூர், நவ. 8: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கரூர் புத்தக திருவிழாவில் கொடைநூல் கொத்தளம் அரங்கில் பொதுமக்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட ரூ. 73,236 மதிப்பிலான 1511 நூல்களை அரசு பள்ளி நூலகங்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.கரூர் புத்தக திருவிழாவில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கொடை நூல் கொத்தளம் அரங்கில் பொதுமக்களிடம் இருந்து ரூ. 73ஆயிரத்து 236 மதிப்பிலான 1511 நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டது.நன்கொடையாக பெறப்பட்ட நுல்களை புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 300 புத்தகங்களும், வாங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 300 புத்தகங்களும், ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 300 புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல், புதுவாடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 300 புத்தகங்களும், நாகனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 311 புத்தகங்களும் என 1511 நூல்கள் பள்ளியில் உள்ள நூலகங்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இதனை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி, சீனிவாசன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளிகளுக்கு கொடை நூல்களை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Karur ,Karur District Collector ,Karur Book Festival ,Kothalam ,Dinakaran ,
× RELATED போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு...