×

பொன்னமராவதியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

 

பொன்னமராவதி,நவ.8: பொன்னமராவதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் பொன். புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட 100க்கு மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச இரயில் மற்றும் பேருந்து பயணச்சலுகை, மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், அன்னப்பிளவு காப்பீட்டு திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு, அரசின் உதவித்தொகை, உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் வயது 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராம திலகம்,இலாகிஜான் வட்டார வள மேற்பார்வையாளர் சிவகுமார், புதுக்கோட்டை உதவி திட்ட அலுவலர் சுதந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சுரேஸ் தலைமையாசிரியர் நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் கவிதா முகாமினை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள்,இயன்முறை மருத்துவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் appeared first on Dinakaran.

Tags : Assessment ,Ponnamaravathi ,Ponnamaravati ,Pudukottai ,Ponnamaravati Pon ,Dinakaran ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...