×

மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி

 

கோவை, நவ. 8: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in6760m இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 7-வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638011 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 0424-2221912 என்ற எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரி adferode2@gmail.com மூலம் அணுகலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Graduate ,Goa ,Department of Fisheries and Fishermen Welfare ,All India Citizenship Examination Training Centre ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து...