×

ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில்

தண்டராம்பட்டு, நவ. 8: சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாயிகளின் பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 100 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததால் சாத்தனூர் அணைக்கு 3300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் சாத்தனூர் அணை 116.75 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய வழியாக ஆயிரம் கன அடி தண்ணீர் வினாடிக்கு தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றும் கரை ஓரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரித்தால் 11 கண் மதகு வழியாக உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி என் நேரத்திலும் உயர்த்தி திறந்து விடப்படும் என்று உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை ஊழியர்கள் வருவாய்த் துறையினர் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமுள்ள கிராம பொது மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துள்ளனர்.

The post ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் appeared first on Dinakaran.

Tags : Tenpenna River ,Chatanur Dam ,Thandarampattu ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...