×

நாலுமாவடியில் நாளை அற்புத விடுதலை பிரார்த்தனை மோகன் சி.லாசரஸ் பங்கேற்பு

நாசரேத், நவ. 8: நாலுமாவடியில் நாளை(9ம் தேதி) நடைபெறும் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டத்தில் மோகன் சி.லாசரஸ் பங்கேற்கிறார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம், நாளை (9ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் இறைசெய்தி அளித்து, வியாதியஸ்தர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். கூட்டம் முடிந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்துவருகின்றனர்.

The post நாலுமாவடியில் நாளை அற்புத விடுதலை பிரார்த்தனை மோகன் சி.லாசரஸ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mohan C. Lazarus ,Nalumavadi ,Nazareth ,Nalumavadi… ,
× RELATED சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு