×

திண்டுக்கல் அருகே மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொழிலாளி சுந்தரம் என்பவரின் மகள் அழகுமீனா (16) மற்றும் -மகன் குமார் (6) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம். கொம்பேரிபட்டி கிராமம். மம்மானியூரில் கடந்த 05.11.2023 அன்று மாலை சுமார் 06:30 மணியளவில், செல்வன்.சு.குமார் (வயது:6) என்ற சிறுவன் அவருடைய வீட்டில் தகரத்தினால் செய்யப்பட்டிருந்த கதவை திறக்க முயன்ற போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அப்போது, விபத்திலிருந்து அச்சிறுவனை காப்பாற்ற முற்பட்ட சிறுவனின் அக்கா செல்வி.சு.அழகுமீனா, த/பெ.சுந்தரம் வயது 16,(பெண்) அவருக்கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கருணை அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post திண்டுக்கல் அருகே மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Minkashiwal crash ,Dindigul Chennai ,Minkashiwa ,Vedasandoor ,Dindigul district ,Minkashiv crash ,Dindigul ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...