×

இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 65 டன் கொட்டை பாக்கு பறிமுதல்..!!

தூத்துக்குடி: இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 65 டன் கொட்டை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் வெளியானது. ரகசிய தகவலை அடுத்து ஜகார்த்தாவில் இருந்து கப்பலில் வந்த கன்டெய்னரில் மத்திய வருவாய் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. தூத்துக்குடி துறைமுகம் வந்த கண்டெய்னர் பெட்டியை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.

அச்சமயம் பஞ்சு கந்தல் என்ற பெயரில் மோசடியாக கப்பலில் தூத்துக்குடிக்கு கொட்டை பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொட்டை பாக்கு கடத்தி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் கைது செய்யப்பட்டார். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 65 டன் கொட்டை பாக்கு பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Thoothukudi ,Tuticorin ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்