×

விவசாய பணிகளுக்கு செல்வதற்கு சாலை வசதி தேவை கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அவசியம்

*பொதுமக்கள் கோரிக்கை

போடி : போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலமும் விவசாய பணிகளுக்கும், கோயில் களுக்கும் செல்வதற்கும் 2 கிலோ மீட்டர் புழுதி மண் சாலையை தார்சாலையாக மாற்றி தர வேண்டும் என பக்தர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள் பொதுமக்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே கொச்சின் தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் துரைராஜபுரம் காலனி தோப்புப்ப ட்டிக்கு இடையே வேம்புலி வாய்க் கால் சாலை 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தச் சாலை இருபுறங்களிலும் சுமார் 2000 ஏக்கர் அளவில் தென்னை, இலவம், வாழை, சோளம், தட்டப்பயறு, பாசிப்பயறு, காய்கறி என பல தரப்பட்ட விவசாய பயிர்கள் கொட்டகுடி பாசனம் மற்றும் கண்மாய் குளங்களில் தேங்கும் நிலத்தடி நீர்பாசனத்தால் தொடர் விவசாயத்தை விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் செய்து வருகின்றனர்.

போடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் மேற்படிச் சாலை வடக்கு மலை மற்றும் மரக்காமலை அடிவாரம் வரையில் தொடர் விவசாயத்தை மேற் கொ ண்டிருப்பதால் உரம், மருந்து கொ ண்டு செல்வதற்கும், சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்து திரும்புவதற்கும் விவசாய பணிகளை கவனிக்க தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்கும் வாகன வசதிகள் எதுவுமின்றி நடந்தும், டூவீலர்களில் சென்றும் கடும் போராட்டத்திற்கு இடையே இப்பணிகளை தொடர்ந்து கட்டாயமாக செய்து வருகின்றனர்.

இந்த வேம்புலி வாய்க்கால் சாலையில் செல்லும் போது ரயில்வே கிராஸ், மேம்பாலம் கடந்து போடி குரங்கணியிலிருந்து தேனிவைகை அணை சேரும் கொட்டக்குடி ஆறும் சாலையின் குறுக்கே மெகா அளவில் கடக்கிறது.இப்பகுதி முழுவதுமே போடி ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பட்டுள்ள அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சி பகுதிகளாக இருக்கிறது.

மேலும் இந்தச் சாலையில் கடந்த 1873ம் வருடம் போடி செட்டுக்கார் பரம்பரையைச் சேர்ந்த சுப்பையா சித்தர் என்பவர் ஜீவசமாதி அடைந் திருப்பதால் பழைய மற்றும் புதிய கோயிலும், பாதாளராயன் கோயில்களும் கட்டப்பட்டு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் அதிகளவில் 3 கிமீ தூரம் நடந்து சென்றும், தங்களின் வசதிக்கு ஏற்ப டூவீலர்களில் செல்வார். ஆனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாவும் ஆத்திர அவசரங்களுக்கு ஆட்டோ, கார், வேன் என வாடகைக்கு அழைத்தால் மண்புழுதி சாலையை இருப்பதால் வர மறுக்கின்றனர்.

இச்சாலையில் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே போடியிலிருந்து தேனி செல்லும் ரயில்வே பாதை மேம்பாலத்தின் வழியாக கடக்கிறது, பாலத்தின் கீழ்புறம் சுரங்கப்பாதை வழியாக இச்சாலை தொடக்கமாக கடக்கிறது.இதனை அடுத்து கொட்டகுடி ஆற்றில் குறுக்கேயும் கடப்பதால் டூவிலர்கள் கார், டெம்போ, ஆட்டோ, டிராக்டர், லாரி என விவசாய வாகனங்கள் யாவும் ஆற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கியே கடக்கிறது. அதிக வெள்ளம் பெருக்கெடுத்தால் மேற்படி வாகனங்கள் யாவும் மூழ்கிவிடும் நிலையில் தான் உள்ளது.

அதற்கு மேலாக தொடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் முற்றிலும் புழுதி மண் சாலையாக இருப்பதால் மழை நேரங்களில் பெரும் சகதியாக மாறுவதும் மற்ற நேரங்களில் புழுதி சூழ்ந்து கிடப்பதால் வாகனங்கள் இயக்க முடியாமல் கடுமையான சிரமத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.விவசாயிகள் இயற்கை உரம், மருந்து சாணம், கூலியாட்களை அழைத்துச் செல்வதற்கும், அங்கு விளைவித்து எடுத்து வருகின்ற விளை பொருட்களை கொண்டு வரு வதற்கும் கடுமையான சிரமத்துடன் போக்குவரத்து வசதி இன்றி பெரும் சங்கடத்திலே திரும்புகின்றனர்.

குறிப்பாக மழை நேரங்களில் புழுதியே சகதி சாலையாக மாறுவதால் முற்றிலும் எந்த வாகனமும் இயக்க முடியாமல் அப்படியே சிக்கி கொண்டு நகர முடியாமல் மாட்டி கொள் வார்கள்.
மேலும் பருவ கால மழைகளின் நேரத்தில் போடி கொட்டகுடி ஆற்றில் கடும் வெள்ளம் வரும்போது முற்றிலும் இந்த வேம்புலி வாய்க்கால் சாலையில் கொட்டகுடி ஆற்றை கடக்கவே முடியாமல் பல நாட்கள் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயமும் பா திக்கப்படுகின்றனர்.

புதிய திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உயர் நீதிமன்றத்தின் உத்த ரவின்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்நிலைப் பகுதிகளின் ஆக்கிரப்புகள் அகற்றியும் ஆற்றுப்பகுதியில் விவசாயிகள், கிராம மக்கள் பயன்படும் தடை இல்லா போக்குவரத்திற்கு உறுதி செய்யும் விதமாக தேவையான அவசியமான பாலம் அமைக்கவும் ,சாலைகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வேம்புலி வாய்க்கால் கொட்டகுடி ஆற்று குறுக்கே பாலம், இரண்டு கிலோ மீட்டர் சாலையினை கள ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகள், கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பக்தர்களின் வசதிக்காக தார்சாலை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயி ஜம்பு சுதாகர் கூறுகையில்: அணைக்கரைப்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள வேம்புலி வாய்க்கால் சாலையில் சுமார் 2500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர். கொட்டகுடி ஆறும் குறுக்கே பாலம் கட்டாயம் கட்ட வேண்டும். ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு சுரங்கப்பாதையை தொடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் புழுதி மண் சாலையை தார் சாலையாக மாற்றித் தர வேண்டும் என்றார்.

போடி நகர செயலாளர் புருஷோத்தமன் கூறுகையில்: விவசாயிகள் கிராம மக்களின் நலன் கருதி மண் மற்றும் புழுதி சாலையாக இருப்பதை தார்சாலையாக அமைக்கப்பட வேண்டும். வாகன போக்கு வர த்துகள் சிரமம் இல்லாமல் எளிதாக சென்று வர கட்டாயமாக கொட்டகுடி ஆற்றில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். என்றார்.

The post விவசாய பணிகளுக்கு செல்வதற்கு சாலை வசதி தேவை கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Kottagudi river ,Bodi ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...