×

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன்!

சென்னை: விவசாயிகளின் நலன் கருதி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம், தமிழக அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திடத்திற்கு அனுமதியளித்தால் வேளாண்மையும், சுற்றுசூழலும் மிகவும் பாதிக்கும். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. இராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமகுடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலும், ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் டெல்டா மாவட்டத்திற்கு இருந்தாலும், இத்திட்டத்தால பொதுவாக விவசாய நிலங்களும், வெளியில் இருந்தாலும், சுற்றுசூழலும் இதனால் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே புதிய தொழில் நுட்ப வசதியுடன் ஹைட்ரோ காபன் கிணறு அமைக்கும் போது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். அதனால் ஓ.எம்.ஜி.சி நிறுவனத்திற்கு, தமிழக அரசும் சுற்றுசூழல்துறையும், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் நலன் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ramanathapuram district ,GK ,Vasan ,Chennai ,Tamilnadu government ,GK Vasan ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...