×

அருமனை அருகே பாராக மாறிய குளத்தின்கரை

*காலி மதுபாட்டில்கள், உணவு பாக்கெட்டுகளை வீசுவதால் சுகாதாரகேடு

அருமனை : அருமனை அருகே பெரிய பரப்பளவு கொண்ட குளம் பைங்குளம் ஆகும். இக்குளத்தை சுற்றி இரு சாலைகளும் உள்ளன. பல்லாயிரம் மக்கள் சிறார்கள் அந்த சாலைகளில் அன்றாடம் பயணித்து வருகிறார்கள். தற்போது சாலை என்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதி என்றும் பாராமல் குளத்தின் கரை ஓரங்களில் மது பிரியர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவோர் கடை முன் திறந்தவெளியில் குடிக்கும் நிலை உள்ளது. அதையும் தாண்டி குளத்தின் கரையில் பார் போன்று உட்கார்ந்து மது அருந்துகிறார்கள். பல பகுதிகளில் இப்படிப்பட்ட செயல்கள் நடக்கின்றன. ஆனால் பைங்குளம் பகுதி மது விரும்பிகள் விரும்பி அமரும் சொகுசு இடமாக மாறி உள்ளது. மது அருந்திய பின் போதையில் குளறி பேசி தள்ளாடுவதும் வாடிக்கையாக்கி உள்ளது.

குடித்த காலி பாட்டில்களை அப்படியே வீசு வதும், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், உணவு பொருட்களை அப்பகுதியில் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
திறந்த வெளியில் மது அருந்தும் நபர்களால் பெண்கள் அப்பகுதியில் நடமாட முடியவில்லை. முகம் சுளிக்கும் நிலை உள்ளது. போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து உள்ள காரணத்தால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது நிலை ஏற்பட்டுள்ளது திறந்த வெளியில் பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் இடையூறாக மது குடிக்க தடை உள்ளது.

ஆனால் இதைப்பற்றி மது பிரியர்கள் கவலைப்படுவதில்லை. எனவே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பொது இடங்களை பொதுமக்கள் இடையூறின்டி பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post அருமனை அருகே பாராக மாறிய குளத்தின்கரை appeared first on Dinakaran.

Tags : Kulatinkarai ,Arumanai ,Arumani ,Baingkulam ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது