×

கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு

*சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கடலூர் : கடலூரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து 3 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளை கடை உரிமையாளர்கள் அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த பாமக மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கடை உரிமையாளர்கள், இது மாநகராட்சிக்கு சொந்தமான இடமா, அல்லது கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடமா என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம். அதுவரை அவகாசம் வழங்க வேண்டும் என்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதனால் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடலூர்- சிதம்பரம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு கடையிலுள்ள பொருட்களை நாளைக்குள் (இன்று) அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூர் முதுநகர் சுத்துகுளம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chuthukulam ,Muthunagar, Cuddalore ,Cuddalore ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்