×

திண்டுக்கல் அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

 

திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல் அருகேயுள்ள செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது திண்டுக்கல் பேகம்பூர் நேருஜி நகரை சேர்ந்த நாகராஜ் (50) என்பவர் வீட்டில் 10 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாகராஜ் தனது கால்நடை தீவனத்திற்காக செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து வந்துள்ளார் என்றும், ரேஷன் அரிசி சாப்பிட விருப்பம் இல்லாத நபர்களிடம் அதனை வாங்கி பாலீஸ் செய்து மாவு அரைக்க விற்று வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

The post திண்டுக்கல் அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Chetiyapatti ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...