×

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும்: திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு

 

திண்டுக்கல், நவ. 7: பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பை அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்க வேண்டும். என கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தென் மண்டல செயலாளர் கார்த்தி, மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் மண்பாண்ட தொழிலாளர்கள் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில்2000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரருக்கு பச்சரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்கள் ஆண்டுதோறும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு களி மண்ணால் ஆன புது மண்பானை மற்றும் அடுப்புகளை அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்க வேண்டும். இதன்மூலம் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். எனவே அரசு இதனை பரிசீலனை செய்து பொங்கலுக்கு மண் பானை, அடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

The post பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும்: திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Dindigul Collector's Office ,Dindigul ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி