×

போடியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றம்

போடி, நவ. 7: போடி நகராட்சியில் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வ ரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி மே லாளர் முனிராஜ், பொறியாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது, அதில் போடி புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருக் கும் புதிய கடைகள் முதல் தளத்திற்கு கூடுதல் படிக்கட்டுகள் அமைப்பது. போடி நகர் பகுதிகளில் பாதாள சாக் கடை இணைப்புகள் இல்லாதவர்களுக்கு அவசர அவசியம் கருதி முதற்கட்டமாக சுமார் 300 இணைப்புகள் வழங்குவது என்றும்,

போடி 2 வது வார்டு ஷேக் பீரணன் தெரு, 14 வது வார்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு தெரு, 17வது வீதி, 20 வது வார்டு சண்மு கசுந்தரம் தெரு ஆகிய நான்கு இடங்களில் பொதுமக்கள் பிறத் தேவை பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணறு சிறு மின்விசை பம்பு அமைப்பது. போடி நகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவின் படி 2626 தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுவதற்கு 2 கோடி 44 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பது உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post போடியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Town Council ,Bodi Municipality ,President ,Rajarajeswari ,Council ,Dinakaran ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்