×

4 தற்காலிக பட்டாசு கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு

வேலூர், நவ.7: வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4 தற்காலிக பட்டாசு கடை விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசுகள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசுகளை பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்ட்டுள்ளது. மேலும் கடைகளில் அனுமதித்த அளவு மட்டுமே பட்டாசுகள் வைத்திருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் இந்தாண்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க 12 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இதில் பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நிரந்தர பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்தாண்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க 12 விண்ணப்பங்கள் வந்தது. இதில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 2 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 தற்காலிக பட்டாசு கடை விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தி ஓரிரு நாட்களில் அனுமதி அளிக்கப்படும். குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’ என்றனர்.

The post 4 தற்காலிக பட்டாசு கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு appeared first on Dinakaran.

Tags : Vellore District ,Vellore ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...