×

ஹைட்ரோ கார்பன் கிணறுக்கு அனுமதி தரக்கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ‘‘ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது’’ என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வலியுறுத்துகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்: ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. ஓஎன்ஜிசி தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஹைட்ரோ கார்பன் கிணறுக்கு அனுமதி தரக்கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamilnadu government ,ONGC ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...