திருச்சுழி, நவ. 7: திருச்சுழி அருகே பி.தொட்டியாங்குளம் தோட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தோட்ட பகுதியில் பதுங்கிருந்து மது விற்பனை செய்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்தததில் காரியாபட்டி அருகேயுள்ள சின்னபுளியம்பட்டியை சேர்ந்த நாகேந்திரன் (40), அனுமதியின்றி விற்பனை செய்ய 272 குவார்டர் மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து நாகேந்திரனை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
The post திருச்சுழி அருகே மது விற்றவர் கைது: 272 குவார்ட்டர் பறிமுதல் appeared first on Dinakaran.
