×

பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ரூ.16.13 கோடியில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல கல்லூரி விடுதி: தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 1350 விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 1271 விடுதிகள் அரசு சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. எஞ்சிய 79 விடுதிகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி 2023-24ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 3 விடுதிகளுக்கு ரூ.16.13 கோடி செலவில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டார். இதை செயல்படுத்தும் விதமாக, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் 100 மாணவிகள் தங்கும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதி, அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் 50 மாணவர்களுக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி விடுதி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேட்டில் 100 மாணவிகளுக்கு சீர்மரபினர் நல கல்லூரி விடுதி என 250 பேர் தங்கும் வகையில் ரூ.16.13 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ரூ.16.13 கோடியில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல கல்லூரி விடுதி: தமிழக அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Seermarapinar Welfare College Hostel ,Perambalur ,Tamil Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu government ,Tamilnadu ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் துவக்கம்