×

தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் பதுக்கிய ரூ.4.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் : சென்னையை சேர்ந்த 5 பேர் கைது

திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் இருந்து செம்மரக்கட்டைகள் சென்னைக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழக-ஆந்திர மாநில எல்லையான தடா பகுதியில் தடா போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பண்ணக்கூர் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களுடன் அங்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 275 செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.4.50 கோடி ஆகும். இதுதொடர்பாக கடத்தலில் ஈடுபட்ட சென்னை சோழவரத்தை சேர்ந்த முருகன்(எ) முருகானந்தம், ஹேமந்த்குமார், ரவி, விமல், சுரேந்திரா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் பதுக்கிய ரூ.4.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் : சென்னையை சேர்ந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Andhra border ,Chennai ,Tirupati ,Tirupati district ,Tamil Nadu-Andhra state ,
× RELATED துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களை காட்டி...