×

காசா போர் குறித்து பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசியும் காசா போர் மற்றும் மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து தொலைபேசியில் பேசினர். காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியுடன், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசி நேற்று தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல், ஹமாஸ் மோதல் குறித்தும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். தீவிரவாத சம்பவங்கள், வன்முறை, பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். காசாவில் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து, அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமென இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்’ என கூறப்பட்டுள்ளது.

The post காசா போர் குறித்து பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : President ,PM Modi ,Gaza War ,New Delhi ,Modi ,Syed Ibrahim Raisi ,West Asia ,Iran ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...