×

அமலாக்கத்துறை கைது செய்தாலும் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க வேண்டும்: ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி அரசு அமல்படுத்திய புதிய கலால் கொள்கை தொடர்பாக துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது ஆம்ஆத்மி எம்பி சஞ்சய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து டெல்லியில் நேற்று ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் கருத்துக்களை முதல்வர் கெஜ்ரிவால் கேட்டறிந்தார். அப்போது அமலாக்கத்துறை கைது செய்தாலும் முதல்வர் பதவியில் கெஜ்ரிவால் நீடிக்க வேண்டும் என்று அனைத்து எம்எல்ஏக்களும் வலியுறுத்தினார்கள்.

கூட்டத்திற்குப் பிறகு, டெல்லி அமைச்சர்கள் அடிசி மற்றும் சவுரப் பரத்வாஜ்கூறுகையில்,’ முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டாலும் டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தேர்தல் மூலம் கெஜ்ரிவாலை ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்பது பாஜவுக்குத் தெரியும். அவரை அகற்ற சதி செய்வதன் மட்டுமே முடியும். நாங்கள் சிறைக்குள் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவோம். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், சிறையில் இருந்து பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகுவோம்’ என்றனர்.

 

The post அமலாக்கத்துறை கைது செய்தாலும் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க வேண்டும்: ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Ahmadmi ,NEW DELHI ,SISODIA ,ARTS POLICY ,DELHI GOVERNMENT ,Kejri ,Aamatmi ,Dinakaran ,
× RELATED ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் ஆலோசனை