×

பிட் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பிட் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் வீரர் விதித் மற்றும் வைஷாலியின் வெற்றி இந்திய திறமைக்கு மற்றொரு உதாரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்ற பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் வீராங்கனை வைஷாலி மோதினார். இப்போட்டி டிராவில் முடிவடைந்தது.

என்றாலும் இந்த தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் வைஷாலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் பிட் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “செஸ் வீரர் விதித் மற்றும் வைஷாலியின் வெற்றி இந்திய திறமைக்கு மற்றொரு உதாரணம், பிட் கிராண்ட் ஸ்விஸ் ஓபனில் இந்தியா முதலிடம் பிடித்ததில் மகத்தான பெருமை” என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post பிட் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vaishali ,Veerangan ,Bit Grand Swiss series ,Delhi ,PM ,Modi ,
× RELATED செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி...