×

ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்; கடைகள் மீது புகாரளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் கடைகள் மீது புகாரளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணம் உள்ளது.

இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணையம் புழக்கத்தில் வரத் தொடங்கியது.

இதுவரை பதினான்கு வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து டிசைன் வாரியாக மாறுபட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் இருக்கும். மற்றொன்றில் ரூபாய் சின்னம் இருக்காது.

எனவே ம்ககள் அதனை போலியான நாணயம் என நம்பத் தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும், அவை செல்லாது என்றும் பல வதந்திகள் மக்களிடையே காணப்பட்டது. ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

The post ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்; கடைகள் மீது புகாரளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம்:...