×

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஆட்டோ திருடிச் சென்ற கூலி தொழிலாளி கைது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். நேற்று கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சவாரிக்கு சென்றுவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். அந்த சமயத்தில் ஒருவர் வந்து அவரது ஆட்டோவை திருடிச்செல்வதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து அவர் கூச்சலிட்டார். ஆட்கள் வருவதற்குள் அந்த நபர், ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஆட்டோ உரிமையாளர் பொன்ராஜ் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ஆட்டோவின் நம்பரை வைத்து விசாரித்தபோது அந்த ஆட்டோ வியாசர்பாடி பகுதியில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் போலீசார் சென்று ஆட்டோவுடன் அந்த நபரை செய்து விசாரித்தபோது அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ்(எ) தக்காளிராஜ்(48) என்பதும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் போதுமான வருமானம் கிடைக்காததால் ஆட்டோவை திருடி குறைந்த விலையில் விற்பனை செய்து ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து பாக்கியராஜை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஆட்டோ திருடிச் சென்ற கூலி தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,market ,Annanagar ,Suresh ,Chennai ,Koyambedu flower market ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...