×

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்ட வீடியோ அறிவிப்பில், ‘டெல்லி அரசு ஊழியர்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தலா ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்கப்படும். கிட்டத்தட்ட 80,000 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதால், அதற்காக டெல்லி அரசு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்லி அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் ஆவர். தீபாவளியன்று அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவற்காக போனஸ் வழங்கப்படுகிறது. டெல்லி மக்களுக்கும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: டெல்லி முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,NEW DELHI ,AMADMI CHAIRMAN ,ARVIND KEJRIWAL ,DELHI GOVERNMENT ,Dinakaran ,
× RELATED இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு...