×

நிதி நிறுவனம் நடத்தி ரூ5 கோடி மோசடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், காடகனூர், மழவந்தாங்கல், கெடார், அத்தியூர்திருக்கை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கண்டாச்சிபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்படி மாதம் ரூ.1000, ரூ.5000 என பல்வேறு தொகைகளில் 2, 3, 5 மாதத்திற்கு பணத்தை கட்டிவந்தால் 3 மடங்கு பணத்தை தருவதாக கூறினர். இந்த ஆசைவார்த்தைகளை நம்பி  எங்கள் கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்தி வந்தோம். எங்களில் பலர் ஏஜென்டாகவும் இருந்து பொதுமக்கள் பலரிடம் பணத்தை வசூலித்து செலுத்தி வந்தோம். சில மாதங்கள் மட்டும் பணத்தை கொடுத்த நிலையில், டெபாசிட் ெதாகையை 2, 3 ஆண்டுகளில் முதிர்வுத்தொகையாக திருப்பி தருவதாகக்கூறி, 4 ஆண்டுகளாகியும் பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் வேலூரை சேர்ந்தவர் மீது ஏற்கனவே பல கோடி ேமாசடி செய்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது எங்களிடமும் சுமார் ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். எனவே இதில் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்….

The post நிதி நிறுவனம் நடத்தி ரூ5 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kandachipuram ,Kadakanur ,Malavanthankal ,Kedar ,Athiyoorthirukai ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...