×

நேபாள நிலநடுக்க தாக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள நிலநடுக்க தாக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். வீட்டில் படுத்திருந்த போது சீலிங் ஃபேன் ஆடியதாகவும், கட்டிலில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அதன் பிறகே தங்களை போன்று பலரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்ததை அறிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 157 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மக்கள் பீதியடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, நொய்டா, குருகிராம்,, ஹரியானா, பரிதாபாத் உள்ளிட்ட வடமாநில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

The post நேபாள நிலநடுக்க தாக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி..!! appeared first on Dinakaran.

Tags : Earthquake ,Delhi ,Nepal ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்