×

சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: ஐகோர்ட் கண்டனம்

சென்னை: சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சனாதனம் பேசுபவர்கள் வேசி என்ற சொல்லை பயன்படுத்துவதா?

விலை மாதர் என பொருள்படும் “வேசி” என்ற வார்த்தையை சமூக வலைதளத்தில் பயன்படுத்திய ரங்கராஜன் நரசிம்மனை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

“சனாதனம் பெயரில் விரும்பத்தகாத சொற்களை பயன்படுத்தக் கூடாது

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது. சமூக ஊடகங்களில் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை ரங்கராஜன் நரசிம்மன் உணர வேண்டும்.

சனாதன விவகாரம் – ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2,000 அபராதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர்நீதிமன்றம் ரூ.2,000 அபராதம் விதித்தது. ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக தொழிலதிபர் வேணு சீனிவாசன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வு விசாரித்தது. சமூக ஊடகத்தில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்திய ரங்கராஜன் நரசிம்மன், 2 வாரங்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்தவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக அடிக்கடி வழக்கு தொடர்ந்து வருபவர் ரங்கராஜன் நரசிம்மன்.

சமூக வலைதளங்களில் 2 வாரங்கள் எழுதுவதற்கு தடை

ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் செயல்பட ரங்கராஜன் நரசிம்மனுக்கு 2 வாரங்கள் தடை விதித்தது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2 வாரத்தில் அபராத தொகையை ரூ.2,000 செலுத்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : sanatana dharma ,Chennai ,Sanathana Dharma ,Aycourt ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...