×

ஹேப்பி நியூஸ்!: தீபாவளிக்கு அடுத்த நாள் லீவா?.. பரிசீலனை செய்யும் தமிழக அரசு.. செம குஷியில் மாணவர்கள்..!!

சென்னை: தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி உள்ளிட்ட எந்த மதத்தின் பண்டிகை என்றாலும் உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வது தான் கொண்டாட்டத்தை உருவாக்குவதாக இருக்கும். தொடர் விடுமுறை இருந்தால் மட்டுமே நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை சென்று சந்திக்க முடியும். அப்படியிருக்க தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமையில் வந்து ஒரு நாள் விடுமுறையுடன் முடிந்துவிடுமோ, சொந்த பந்தங்களை பார்க்க முடியாதோ என்ற கவலை பலதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வரும் நிலையில் சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்கவேண்டும் என்றும், தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி நவம்பர் 13ல் விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும், இதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதேபோல கடந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட்டது.

இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அக்டோபர் 22ம் தேதி அரசு அறிவித்தது. கடைசி நேர அறிவிப்பால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், மீண்டும் பணிக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஹேப்பி நியூஸ்!: தீபாவளிக்கு அடுத்த நாள் லீவா?.. பரிசீலனை செய்யும் தமிழக அரசு.. செம குஷியில் மாணவர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Leiva ,Diwali ,Government of Tamil Nadu ,Sema Kushi ,Chennai ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...