×

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம்; மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கம் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் கட்டிடத்தில் தேன் கூடு கட்டுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அடிக்கடி தேன் கூடுகளை நிர்வாகத்தினர் களைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் தேன் கூட்டின் மீது மாணவர்கள் சிலர் கல் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேனீக்கள் அங்குள்ள அனைத்து மாணவர்களையும் கொட்ட தொடங்கியுள்ளது.

இதனை கண்ட மாணவர்கள் பலரும் அலறடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இருப்பினும் தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் மயக்கடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக காயம் அடைந்த மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தேனீக்கள் கூடு கட்டும் வரை பள்ளி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? என்று மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையாக சாடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம்; மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Villupuram district ,Villupuram ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...