×

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

*2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பூவன் மகன் முருகானந்தம்(25). இவர் நேற்று கூலி வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் மாலையில் பூட்டியிருந்த கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

முருகானந்தம் வீட்டில் பற்றி எரிந்த தீயானது அருகில் இருந்த சந்திரா என்பவரது வீட்டிற்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் பற்றி எரிந்த தீயை ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு முற்றிலுமாக அணைத்தனர். தீப்பற்றி எரிந்த இரண்டு வீடுகளிலும் இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தீப்பற்றிய காரணம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,C. Meiyur ,Villupuram ,
× RELATED குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த நாகப் பாம்பு