×

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள், ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட அரசுத்துறை தலைமை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியர், எஸ்பி, வனத்துறை, தீயணைப்புத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி அரசு நலத்திட்டங்களுக்காக பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இதனிடையே இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை இதுவரை போடப்படாமல் இருப்பதால் மண்சாலையாகவே இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சேறும், சகதியமாகவும், குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.

குறிப்பாக வட்டாரபோக்குவரத்து அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கோலியனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கிவருகிறது. விதைநெல் வாங்குவதற்காகவும், வேளாண் சார்ந்த திட்டங்களுக்காகவும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சேறும், சகதியுமாக இருப்பதால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாவட்ட அரசுத்துறை தலைமை அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலையே இந்த நிலையில் காணப்பட்டால், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மக்களுக்கு எப்படி அடிப்படை வசதிகள் கிடைக்கும். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு எப்படி செய்துகொடுக்கப்போகிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்டவளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலையை தரமுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் இந்த பெருந்திட்டவளாகம் கொண்டுவரப்பட்டது. வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்கள் அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரே
இடத்தில் அனைத்து துறை அரசு அலுங்களுக்கும் சென்று அலைகழிப்பை தடுக்கும் வகையிலும், வீண் அலைச்சல், செலவினத்தை குறைக்கும் வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் நல்ல சாலையை ஏற்படுத்திக் கொடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram Collector Perunditha complex ,Villupuram ,Villupuram Collectorate Perunditta Complex ,Collector Perunditta Complex ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...