×

ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியில் 12 மணி நேரத்தில் சுரங்கப்பாலம்: இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்கு முடித்த ரயில்வே

சென்னை: ஆவடியை அடுத்துள்ள நெமிலி சேரியில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் வகையில் 12 மணி நேரத்தில் சுமார் 50 அடி சுரங்கப்பாலப்பணிகளை ரயில்வே துறையினர் முடித்துள்ளனர். சென்னி ஆவடியை அடுத்துள்ள நெமிலிச்சேரியில் ரயில்வே சுரங்கபாதைகள் அமைக்கும் பணியில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை நடந்து முடிந்துள்ளன.

இதற்காக சென்னை, திருவள்ளுர் மற்றும் திருவள்ளுர் சென்னை மார்க்கங்களில் 50கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் முற்றிலுமாக றது செய்யப்பட்டன. புறநகர் ரயில்பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்பட்டன. ரூ.4 கோடி மதிப்புள்ள பிரீ காஸ்ட் முறையில் 33 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாதையில் முதல்கட்டமாக 10 பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதி பணிகள் தீபாவளிக்கு பிறகு நடக்கும் என்று கூறப்படுகிறது.

The post ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியில் 12 மணி நேரத்தில் சுரங்கப்பாலம்: இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்கு முடித்த ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Nemilicherry ,Chennai ,Avadi ,Dinakaran ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...