×

புதுவை கண்ணன் மறைவு புதுச்சேரி அரசியலில் எளிதில் ஈடு செய்ய இயலாத இழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழிசை இரங்கல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் புதுவை கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் மூல மூலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

புதுச்சேரி துணைத்துணை ஆளுநர் தமிழிசை:

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சிந்தனை வாதி திரு.ப.கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த அவரது இழப்பு புதுச்சேரி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று புதுச்சேரி துணைத்துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது முதல் பணியாற்றிய  கண்ணன் அவர்கள், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post புதுவை கண்ணன் மறைவு புதுச்சேரி அரசியலில் எளிதில் ஈடு செய்ய இயலாத இழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழிசை இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Puduwai Kannan ,Puducherry ,Chief Minister MLA K. Stalin ,Former Speaker of ,Chief Minister ,MLA K. Stalin ,Former Minister of ,Kannan ,Puduvai Kannan ,CM K. Stalin ,
× RELATED இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை...