×

கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக ஆய்வு!: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பூவாளை கிராமத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  இருவரும் தேர்தல் பரப்புரை வாகனத்தில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தேர்தல் பரப்புரை வாகனத்தில் இருவரும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து சிதம்பரம் புறவழிசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் புவனகிரி அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை இருவரும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். …

The post கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக ஆய்வு!: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்..!! appeared first on Dinakaran.

Tags : OPS-EPS ,Cuddalore ,Coordinator ,Chidambaram Bhuvanagiri ,Cuddalore District ,Bannerselvam ,Deputy Coordinator ,Edapadi ,OPS ,EPS ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...