×

தமிழ்நாட்டு எல்லையில் பட்டாசுகளை வாங்கிச் செல்லும் மக்கள்: விலை குறைவு, புதுப்புது ரகங்களுக்கு கர்நாடக மக்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு – கர்நாடக எல்லையான ஜூஜூவாடியில் உள்ள வெடி கடைகளில் பட்டாசுகளை வாங்கி செல்ல பெங்களூருவில் இருந்து குடும்ப குடும்பமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7ம் தேதி பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் அருகே உள்ள தமிழ்நாட்டு எல்லையான ஜூஜூவாடியில் உள்ள பட்டாசு கடை,கடைகளுக்கு கர்நாடக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

மேலும், பெங்களூருவை காட்டிலும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பட்டாசுகள் குறைந்த விலையில் விற்கப்படுவதாலும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் கிடைப்பதாலும் இங்கு வந்து வாங்கி செல்வதாக தெரிவிக்கிறார்கள். இதனால் பல கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. பட்டாசுகளை வாங்கி செல்ல கார்களில் வந்த பெரும்பாலானோர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும் கார்களை நிறுத்தியதால் சற்றே போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.

The post தமிழ்நாட்டு எல்லையில் பட்டாசுகளை வாங்கிச் செல்லும் மக்கள்: விலை குறைவு, புதுப்புது ரகங்களுக்கு கர்நாடக மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu border ,Karnataka ,Krishnagiri ,Bengaluru ,Jujuwadi ,Tamil Nadu - Karnataka ,
× RELATED ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!