×

வள்ளியூரில் கலைஞர் முத்தமிழ் தேருக்கு சிறப்பான வரவேற்பு

 

நெல்லை, நவ.6: முத்தமிழறிஞர் கலைஞரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினருக்கு அவரது பன்முக தன்மையினை எடுத்து கூறும் வகையில், எழுத்தாளர்- கலைஞர் குழுவின் மூலம் ‘முத்தமிழ் தேர்’ அலங்கார ஊர்தி தமிழ்நாடு முழுவதும் உலா வருகிறது. கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் தொடங்கிய முத்தமிழ் தேர் நேற்று நெல்லை மாவட்ட பகுதிகளில் வலம் வந்தது. இந்த வாகனத்தில் ‘எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்’ என முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பன்முக தன்மை குறித்த புகைப்படங்கள், கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இவ்வாகனம் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே வந்த முத்தமிழ் தேரினை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். மேலும் அவர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, ராதாபுரம் தாசில்தார் இசக்கிபாண்டியன், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post வள்ளியூரில் கலைஞர் முத்தமிழ் தேருக்கு சிறப்பான வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Muthamil Ther ,Nellai ,Muthamizhari ,
× RELATED நெல்லை – நாகர்கோவில் இடையே விபத்தில்...