×

கோழியை கொன்று விட்டு முட்டையை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது

 

சீர்காழி,நவ.6: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் கிராமத்தில் வசிப்பவர் கீர்த்தனா. இவரது வீட்டில் கோழி அடைத்து வைத்திருந்த அறைக்குள் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. அங்கிருந்த ஒரு கோழியை கொத்தி கொன்று விட்டு ஒரு முட்டையை விழுங்கியது. நல்லபாம்பு அங்கிருந்து செல்ல முடியாமல் கிடந்ததை கண்ட கீர்த்தனா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியன் என்பவருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற பாண்டியன் முட்டையை விழுங்கி நகர முடியாமல் இருந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று விட்டார் பாம்பு பிடிபட்டதால் கீர்த்தனா குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

The post கோழியை கொன்று விட்டு முட்டையை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Keerthana ,Thirukarugavur ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது