×

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

 

தஞ்சாவூர், நவ.6: தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் வேளாண்மை துறை ஆணையருமான முனைவர். இல.சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆடுதுறை கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, திருவாடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளிகளிலும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் செயின்ட் அன்னீஸ் மேல்நிலைப் பள்ளி, டான் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் ஆகியவற்றிலும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில்  கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப்பள்ளியிலும், திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருப்பழனம், பாலகணபதி வித்யாசாலா உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் வேளாண்மை துறை ஆணையார் முனைவர்.இல.சுப்பிரமணியன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Department ,Dinakaran ,
× RELATED மீன் பிடிக்க தொழிலாளர்கள் ஆர்வம்...