×

மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அழைப்பு

 

திருமங்கலம், நவ. 6: கள்ளிக்குடி விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு, வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளிக்குடி பகுதியில் சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களான பருத்தி மற்றும் மக்காசோளம் பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையில் உள்ள காலத்தில் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் மக்காசோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.2550, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.488 பிரீமியம் தொகை செலுத்தவேண்டும். பயிர் காப்பீடு செய்தவற்கு விவசாயிகள் தங்கள் அருகேயுள்ள தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வணிகவங்கிகள் மற்றும் பொதுசேவை மையம் மூலமாக முன்மொழிவுபடிவம், அடங்கல், நடப்பு சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கால், நலி உரிமைபட்டா மற்றும் சிட்டா ஆவணங்களுடன் நேரில் சென்று பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மக்காசோளம் மற்றும் பருத்திக்கு பிரீமியம் தொகை செலுத்த நவ.15ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு அருகேயுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை